ADDED : செப் 20, 2026 12:24 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையம் பழையபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது வீட்டில் புதுப்பாளையத்தை சேர்ந்த முருகன் 49, பெயிண்டர். வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் நாகராஜின் தாய் மாமா திருப்பதி ராஜா உறவினர் அபர்ணா இருவரும் தங்கள் வீட்டில் வைத்திருந்த பட்டுப்புடவைகள், பணம் ரூ.5 ஆயிரம் காணாமல் போனது குறித்து முருகனிடம் கேட்டதுடன் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.
நேற்று காலை முருகன் அவரது வீட்டில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். மகேஸ்வரி தனது கணவர் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்களுடன் அரசு மருத்துவமனையில் ஒன்று கூடினார். ராஜபாளையம் ஏ.எஸ்.பி சைண்டேன் ஸ்வப்னிலா அனில் பேச்சுவார்த்தை நடத்தி புகாரின் பேரில் திருப்பதி ராஜா, அபர்ணா இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
