/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி அரசு பஸ் கண்டக்டர் மீது வழக்கு

ADDED : ஆக 25, 2025 05:31 AM
வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி பைனான்ஸ் நிறுவன ஊழியரிடம் ரூ.4.35 லட்சம் வாங்கிவிட்டு வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றிய அரசு பஸ் கண்டக்டர் பாண்டியராஜ் மீது வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.
வத்திராயிருப்பு மேல தெருவை சேர்ந்தவர் சாமுவேல் ஆறுமுகராஜ் 33. இவர் வத்திராயிருப்பில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வந்துள்ளார்.
2020ல் ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்தை வத்திராயிருப்பு அரசு பஸ் டிப்போவில் கண்டக்டராக பணிபுரியும் பாண்டியராஜ் 48, வாங்கியுள்ளார். ஆனால் தற்போது வரை வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் பாண்டியராஜ் ஏமாற்றி வந்துள்ளார்.
இது தொடர்பாக சாமுவேல் ஆறுமுகராஜ் வத்திராயிருப்பு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் பாண்டியராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.