/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கவரிங் கொடுத்து கடன் முயற்சித்த வழக்கு கூட்டுறவு சங்க நகைகளை ஆய்வு செய்ய முடிவு
/
கவரிங் கொடுத்து கடன் முயற்சித்த வழக்கு கூட்டுறவு சங்க நகைகளை ஆய்வு செய்ய முடிவு
கவரிங் கொடுத்து கடன் முயற்சித்த வழக்கு கூட்டுறவு சங்க நகைகளை ஆய்வு செய்ய முடிவு
கவரிங் கொடுத்து கடன் முயற்சித்த வழக்கு கூட்டுறவு சங்க நகைகளை ஆய்வு செய்ய முடிவு
ADDED : டிச 13, 2025 05:59 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் நிதி நிறுவனத்தில் கவரிங் நகைகளை அடகு வைக்க முயன்ற வழக்கில் கூட்டுறவு சங்க செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், கூட்டுறவு சங்கத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ராஜபாளையத்தில் முத்துாட் பின் கார்ப் நிதி நிறுவன கிளையில் தங்க முலாம் பூசப்பட்ட 445 கிராம் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.40 லட்சம் கடன் பெற முயற்சித்த வழக்கில் தலைமை ஆசிரியர் குமரேசன் 58, மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க., மருத்துவ அணி துணை அமைப்பாளர் சதீஷ் சத்யா 48, ராஜபாளையம் பாலகிருஷ்ணன் 43, அருப்புக்கோட்டை சோனை முத்து 42, ஆகிய நான்கு பேர் நேற்று முன்தினம் கைது செய்யப் பட்டனர்.
விசாரணையில் நகைகளை ஏற்கனவே கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்து ரூ.21 லட்சம் கடன் பெற்றதும், அதை மீட்டு அதிக தொகைக்கு மீண்டும் அடகு வைக்க தனியார் நிதி நிறுவனத்தை நாடியது தெரிந்தது.
இதனை அடுத்து ராஜபாளையம் நகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க செய லாளர் சண்முகநாதன் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் கைது செய்தனர். வழக்கில் தலைமறைவாக உள்ள தஞ்சாவூரை சேர்ந்த ரமேஷ், ராஜபாளையத்தை சேர்ந்த கண்ணன் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே ராஜபாளையம் நகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் கவரிங் நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளதாக பிப். மாதம் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் சண்முகநாதன் அளித்த புகார் வழக்கு பதிவு செய்யப்படாமல் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவு வங்கி யில் ரூ.7 கோடி வரை நகை கடன் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது கூட்டுறவு வங்கி செயலாளர் சண்முகநாதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து நகைகளையும் சோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

