/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாலிபரை தாக்கிய எஸ்.ஐ., ஏட்டு மீது வழக்குப்பதிவு
/
வாலிபரை தாக்கிய எஸ்.ஐ., ஏட்டு மீது வழக்குப்பதிவு
வாலிபரை தாக்கிய எஸ்.ஐ., ஏட்டு மீது வழக்குப்பதிவு
வாலிபரை தாக்கிய எஸ்.ஐ., ஏட்டு மீது வழக்குப்பதிவு
ADDED : ஜன 01, 2026 06:15 AM
நரிக்குடி: வாக்கி டாக்கி காணாமல் போனதற்காக தவக்கண்ணன் 26, என்பவரை தாக்கிய அ. முக்குளம் ஸ்டேஷனில் பணி செய்த எஸ்.ஐ., ஏட்டு மீது ஐகோர்ட் உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி எஸ்.மறைக்குளம் தவக்கண்ணன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார். மார்ச் 21, 2020ல் விசாரணைக்காக அ.முக்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கிருந்த எஸ்.ஐ., மணிகண்டன் விசாரித்தார். அன்று இரவு வாக்கி டாக்கி காணாமல் போனது.
தவக்கண்ணனை திருடியதாக ஒப்புக்கொள்ள வற்புறுத்தி தாக்கி, வழக்குப்பதியப்பட்டது. 2024ல் திருச்சுழி கோர்ட் விசாரித்து, அவரை விடுதலை செய்தது. பொய் வழக்கு போட்ட எஸ்.ஐ., மணிகண்டன், ஏட்டு செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் தவக்கண்ணன் வழக்கு தொடர்ந்தார்.
அவரை தாக்கி, பொய் வழக்கு பதிவு செய்த இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய நீதிபதி சுந்தர் மோகன்
உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆயுதங்களால் தவக்கண்ணனை தாக்கியதாக அ. முக்குளத்தில் பணி செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. தற்போது எஸ்.ஐ., மணிகண்டன் தளவாய்புரத்திலும், ஏட்டு செல்வராஜ் காரியாபட்டியிலும் பணியாற்றி வருகின்றனர்.

