/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ்களில் 'சிசிடிவி' கேமரா விரைவில் பொருத்த வேண்டும்; பயணிகள் எதிர்பார்ப்பு
/
பஸ்களில் 'சிசிடிவி' கேமரா விரைவில் பொருத்த வேண்டும்; பயணிகள் எதிர்பார்ப்பு
பஸ்களில் 'சிசிடிவி' கேமரா விரைவில் பொருத்த வேண்டும்; பயணிகள் எதிர்பார்ப்பு
பஸ்களில் 'சிசிடிவி' கேமரா விரைவில் பொருத்த வேண்டும்; பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 06, 2024 12:12 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்களில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், காரியப்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட நகர் பகுதிகள், அதனை சுற்றியுள்ள ஊரகப்பகுதிகளுக்க அதிக அளவில் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதன் மூலம் ஊரகப்பகுதிகளில் இருந்து நகர் பகுதிகளுக்கு வேலை, பள்ளி, கல்லுாரிகளுக்கு பெண்கள், குழந்தைகள் சென்றுவருகின்றனர்.
டில்லியில் பஸ்சில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்திற்கு பின்னர் நாடுமுழுவதும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி பஸ்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன் பின் கர்நாடகா மாநிலத்தில் அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகளை துவக்கினர்.
ஆனால் இதுவரை தமிழகத்தில் பஸ்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தும் நடைமுறை சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் செயல்படவில்லை. இதனால் தினமும் செல்லக்கூடிய பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம் பாலியல் தொந்தரவுகளை கொடுக்கின்றனர்.
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது புகார் கொடுத்தால் வேலை, பள்ளி, கல்லுாரி செல்லும் போது பின்தொடர்ந்து வந்து மிரட்டுகின்றனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் அரசு, தனியார் பஸ்களில் சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தி பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.