/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தளவாய்புரத்தில் பழைய ரோட்டை அகற்றாமல் சிமெண்ட் ரோடு
/
தளவாய்புரத்தில் பழைய ரோட்டை அகற்றாமல் சிமெண்ட் ரோடு
தளவாய்புரத்தில் பழைய ரோட்டை அகற்றாமல் சிமெண்ட் ரோடு
தளவாய்புரத்தில் பழைய ரோட்டை அகற்றாமல் சிமெண்ட் ரோடு
ADDED : அக் 22, 2024 04:26 AM
தளவாய்புரம்: தளவாய்புரத்தில் ஏற்கனவே இருந்த பழைய ரோட்டை அகற்றாமல் அதன் மேலேயே சிமெண்ட் ரோடு அமைக்கப்பட்டு வருவதற்கு குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தளவாய்புரம் கிராமம். இங்கு விடுபட்ட பகுதிகளில் புதிய சிமெண்ட் ரோடு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் 8வது வார்டு பி.வி.எஸ் தெருவில் புதிய சிமெண்ட் ரோட்டிற்கான பணிகள் நேற்று தொடங்கின.
ஆனால் ஏற்கனவே இருந்த பழைய சிமெண்ட் ரோடு அகற்றப்படாமல் அதன் மேலேயே புதிய சிமெண்ட் ரோடு பணி தொடங்கியதை அடுத்து அப்பகுதியில் குடியிருப்பு வாசிகள் கேள்வி எழுப்பினர். இருப்பினும் ஒப்பந்ததாரர்கள் பணிகளை முடித்து விட்டனர்.
குடியிருப்புகள் ரோட்டை விட பள்ளத்தில் செல்வதை தடுக்க பழைய சிமெண்ட், தார் ரோட்டை அகற்றி விட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற அரசு அறிவித்தும் விதி பின்பற்ற படாதது குறித்து மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஆய்வு செய்யப்படும்
ராமமூர்த்தி, பி.டி.ஓ., ராஜபாளையம்: சிமெண்ட் ரோட்டை அகற்றாமல் அதன் மேலேயே போட்டது குறித்து புகார் வந்துள்ளது. இதுகுறித்து நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

