ADDED : செப் 23, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை நிறுவனர் கலசலிங்கத்தின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.
இணை வேந்தர் டாக்டர் அறிவழகி, துணைத்தலைவர் சசி ஆனந்த், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். பேராசிரியை குந்தவை வரவேற்றார்.
தமிழ் துறை பேராசிரியை சங்கீதா வடிவமைத்த கலசலிங்கம் வாழ்க்கை பயணம் நுாலை, வேந்தர் ஸ்ரீதரன் வெளியிட்டார். விழாவில் பட்டிமன்றம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர் நல இயக்குனர் சாம்சன் நேசராஜ் வாழ்த்தினார். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வினோலின் ஜேம்ஸ் நன்றிக் கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கபிலன், திருமுருகன், சங்கீதா செய்தனர்.