/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேங்கும் கழிவுகள், சேதமடையும் குழந்தைகள் மையம்
/
தேங்கும் கழிவுகள், சேதமடையும் குழந்தைகள் மையம்
ADDED : ஜன 05, 2024 05:15 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 17 வது வார்டில் ஓடைகள் வாறுகால்களில் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு, கொசுத்தொல்லை, விஷ பூச்சிகள் நடமாட்டம், சேதமடைந்து வரும் குழந்தைகள் மையம் என பல்வேறு குறைபாடுகளுடன் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.
சிவகாசி ரோடு, ஊரணிப்பட்டி தெரு, ஊரணிப்பட்டி வடக்கு தெரு, கல்லறை தெரு ஆகிய தெருக்களைக் கொண்டது இவ்வார்டு. இந்த வார்டின் எல்லை பகுதியான வடமலைகுறிச்சி கண்மாய் நீர்வரத்து ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்தும், கழிவுகள் தேங்கியும், புதர் மண்டியும் கிடக்கிறது. இதனால் சுகாதாரக் கேடு, கொசு தொல்லை, விஷப்பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது.
சிவகாசி மெயின் ரோட்டில் கனரா வங்கி எதிரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக பல மாதங்களாக செல்கிறது. சர்ச் சந்திப்பில் இருந்து செங்குளம் கண்மாய் வரை ரோட்டின் வடக்கு பகுதியில் உள்ள கழிவுநீர் வாறுகால்களில் கழிவுகள் தேங்கி காணப்படுகிறது. தியாகராஜா பள்ளிக்கு பின்புறம் உள்ள குழந்தைகள் மைய கட்டிடம் பராமரிக்கப்படாமல் சேதமடைந்து காணப்படுகிறது.