/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி -கள்ளிக்குடி ரோட்டில் விபத்தை தவிர்க்க சென்டர் மீடியன்
/
காரியாபட்டி -கள்ளிக்குடி ரோட்டில் விபத்தை தவிர்க்க சென்டர் மீடியன்
காரியாபட்டி -கள்ளிக்குடி ரோட்டில் விபத்தை தவிர்க்க சென்டர் மீடியன்
காரியாபட்டி -கள்ளிக்குடி ரோட்டில் விபத்தை தவிர்க்க சென்டர் மீடியன்
ADDED : ஜன 09, 2024 12:48 AM

காரியாபட்டி, : காரியாபட்டி முக்கு ரோட்டில் இருந்து கள்ளிக்குடி ரோடு பைபாஸ் வரை அடிக்கடி விபத்து நடப்பதால் சென்டர் மீடியன் ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டியில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் குடியேறி வருகின்றனர். மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. பஜாரில் இருந்து செவல்பட்டி வரையிலும், முக்கு ரோட்டில் இருந்து கள்ளிக்குடி ரோடு பைபாஸ் வரையிலும் எப்பொழுதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கள்ளிக்குடி சாலையில் பள்ளிகள், மருத்துவமனை, கோயில், மசூதி, சர்ச் உள்ளது. எப்போதும் இந்த ரோடு பிசியாக இருக்கும். மாணவர்கள், மருத்துவமனைக்கு வருபவர்கள் ரோட்டில் உள்ள இடையூறுகளால் பெரிதும் சிரமப்படுகின்றனர். கடை வைத்திருப்பவர்கள், ரோட்டோரம் குடியிருப்பவர்கள் ரோடு வரை ஆக்கிரமித்து வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
இந்நிலையில் வாறுகால் கட்டும் பணி நடந்து வருகிறது. ஒருபுறம் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாறுகால் பணி நடைபெற்று வருகிறது. ரோடு அகலமாக உள்ளது. மற்றொரு புறமும் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தாராளமாக நான்கு வாகனங்கள் விலகிச் செல்லக் கூடிய வகையில் அகலம் கிடைக்கும்.
இந்த தருணத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணவும், விபத்தை தடுக்கவும் ரோட்டை விரிவாக்கம் செய்து,சென்டர் மீடியன் ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.