/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி அணையில் மத்திய நீர்வளக் குழு ஆய்வு
/
இருக்கன்குடி அணையில் மத்திய நீர்வளக் குழு ஆய்வு
ADDED : பிப் 08, 2024 06:42 AM

சாத்துார், ; இருக்கன்குடி நீர்த்தேக்கத்தை மத்திய நீர்வளக் குழுவினர் ஆய்வு செய்தனர். இருக்கன்குடியில் அர்சுனா நதி வைப்பாறு குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இங்கு 22 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.
அணையில் புனரமைப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மத்திய நீர் ஆணையத்தின் பொறியாளர் குழுவினர் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொறியாளர் வர்ஷா வா தலைமையில் பொறியாளர்கள் முராரிரத்னம், செல்வம் , ருஷ் தாம்லி, ராணி, தயாளகுமார், தனலட்சுமி, கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழு இருக்கன்குடி அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொதுப்பணித்துறை மாவட்டஇணை பொறியாளர் சேதுராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் ரத்தினவேல் உடனிருந்தனர்.

