/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துாய்மைப் பணியாளர்களுக்கு தொகுப்பு வழங்கும் விழா
/
துாய்மைப் பணியாளர்களுக்கு தொகுப்பு வழங்கும் விழா
துாய்மைப் பணியாளர்களுக்கு தொகுப்பு வழங்கும் விழா
துாய்மைப் பணியாளர்களுக்கு தொகுப்பு வழங்கும் விழா
ADDED : டிச 28, 2025 05:53 AM

விருதுநகர்: விருதுநகரில் கே.வி.எஸ்., 1978 எஸ்.எஸ்.எல்.சி., நண்பர்கள் சங்கம் சார்பில், நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு போர்வை, குல்லா, ஸ்கார்ப் அடங்கிய தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடந்தது.
சங்கத் தலைவர் ரமேஷ் வரவேற்றார். பாண்டியன் கிராம வங்கி ஓய்வு பெற்ற சேர்மன் கார்த்திகேயன் குத்துவிளக்கு ஏற்றினார். மாவட்ட எஸ்.பி.கண்ணன் பேசுகையில், போலீசை பார்த்து தப்பு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும். போலீஸ், துாய்மைப் பணியாளர்கள் இருதரப்பிற்கும் காக்கி உடைதான் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து ஊருக்கு சேவையாற்ற வேண்டும்'' என்றார்.
விழாவில் நகராட்சி தலைவர் மாதவன், கே.வி.எஸ்., பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், நகராட்சி பொறியாளர் பிரபாகரன், நாற்பது நிரந்தர பணியாளர்கள் உட்பட 270 துாய்மைப் பணியாளர்களுக்கு தொகுப்புகள் வழங்கப்பட்டன. நகராட்சி கமிஷனர் விஜயகுமார், மதுரை வருமான வரித்துறை இணை கமிஷனர் அழகப்பன்,,உபதலைவர் குணாளன், முன்னாள் மாணவர் பவளக்கண்ணன் உட்பட சங்க நிர்வாகிகள், துாய்மைப் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

