/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு கழிவுகளை ஓரங்களில் கொட்டி வைத்திருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம்

ADDED : டிச 28, 2025 05:52 AM

அருப்புக்கோட்டை: அருப்புகோட்டை அருகே புதிய ரோடு அமைப்பதற்காக பழைய ரோட்டை தோண்டி எடுத்து அதன் கழிவுகளை ரோடு ஓரங்களில் கொட்டி இருப்பதால் ஓரங்களில் ஒதுங்கும் வாகனங்கள் சிரமப்படுகின்றன.
அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் ரோடு பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருந்தது. இந்த ரோடு வழியாகத்தான் இருக்கன்குடிக்கு மக்கள் வாகனங்களிலும், பாதயாத்திரை ஆகவும் சென்று வந்தனர். ரோடு அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் பல பகுதிகளில் கிடங்கு போல் மாறிவிட்டதால் வாகனங்கள் சென்று வர சிரமப்பட்டன.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை ஒரு மாதத்திற்கு முன்பு புதிய ரோடு அமைத்தது. பழைய ரோட்டின் தார் கழிவுகளை பெயர்த்து எடுத்து அதை ரோடு ஓரங்களில் சமன் செய்யாமல் கொட்டி வைத்துள்ளனர். இதனால் ரோடு ஓரங்களில் ஒதுங்கும் டூவீலர்கள் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையினர் ரோட்டின் இரு பக்கமும் உள்ள தார் கழிவுகளை சமன் செய்து வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.