/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.45 லட்சத்தில் புனரமைத்த ஊருணி கழிவுநீர் குட்டையான கொடுமை
/
ரூ.45 லட்சத்தில் புனரமைத்த ஊருணி கழிவுநீர் குட்டையான கொடுமை
ரூ.45 லட்சத்தில் புனரமைத்த ஊருணி கழிவுநீர் குட்டையான கொடுமை
ரூ.45 லட்சத்தில் புனரமைத்த ஊருணி கழிவுநீர் குட்டையான கொடுமை
ADDED : டிச 28, 2025 05:52 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நகராட்சி மூலம் லட்சக்கணக்கான நிதியில் புனரமைக்கப்பட்ட ஊருணி மீண்டும் கழிவுநீர் தேங்கியதால் செலவழித்த நிதி வீனானது.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட பிரமடை ஊருணி உள்ளது. பல ஆண்டுகளாக முட்புதர்களாகவும் குப்பை கொட்டும் இடமாகவும் இருந்ததை, நகராட்சியினர் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று ஊருணியை புனரமைத்தனர். 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஊருணியை சுற்றிலும் நடைபயிற்சிக்கான பாதை அமைக்கப்பட்டது. சுற்றிலும் பூஞ்செடிகளும், மின்விளக்குகளும் அமைக்கப்பட்டன.
சில மாதங்களுக்கு முன்பு ஊருணி திறப்பு விழா கண்டது. முறையான வாறு கால் அமைப்பு, மழை நீர் உள்ளே வருவதற்கான வழிகளை சரி செய்யாததால், ஊருணியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் எடுக்கிறது.
நடைப்பயிற்சி செய்ய மக்களுக்கு பூங்கா திறந்து விடப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. அரசு நிதி லட்சக்கணக்கில் செலவழித்தும் ஊருணி பயனின்றி கழிவுநீர் குட்டையாக மாறியது.

