/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் புதர்மண்டி கிடக்கும் புற்களால் அச்சம்
/
நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் புதர்மண்டி கிடக்கும் புற்களால் அச்சம்
நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் புதர்மண்டி கிடக்கும் புற்களால் அச்சம்
நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் புதர்மண்டி கிடக்கும் புற்களால் அச்சம்
ADDED : டிச 28, 2025 05:51 AM

காரியாபட்டி: மதுரை -- தூத்துக்குடி நான்கு வழி சாலை சென்டர் மீடியனில் புதர்மண்டி கிடக்கும் புற்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். விபத்துக்கள் ஏற்படும் முன் அப்புறப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை படுமோசமாக இருந்தது. பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் தற்போது சீரமைக்கப்பட்டது. சென்டர் மீடியனில் அரளி செடிகளை வளர்த்து எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூசாத அளவிற்கு வளர்க்க வேண்டும் என்பது விதி. காரியாபட்டி, கல்குறிச்சி பகுதிகளில் செடிகள் ஆங்காங்கே இல்லாமல் திறந்த வெளியாக உள்ளது. அதிக மிளிரும் விளக்குகளை எரியவிட்டு, எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கள் கூசுவதால் விபத்து அச்சம் உள்ளது. தொடர்ந்து, பருவமழை பெய்ததன் காரணமாக சென்டர் மீடியனில் அதிக அளவில் புற்கள் முளைத்துள்ளன.
அரளிச் செடிகள் வளராமல் கருகி வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, வளர்ந்த புற்களுக்குள் நாய்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மறைந்திருந்து திடீரென ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு தாவும் ஆபத்து உள்ளது. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். டூவீலரில் செல்பவர்களின் கதி அதோ கதியாகிறது. வளர்ந்துள்ள புற்களை ஆடு, மாடுகளை விட்டு மேய விடுகின்றனர். திடீரென ரோட்டில் குறுக்கும், நெடுக்கமாக செல்வதால், கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்படுகிறது.
அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களின் மிளிரும் விளக்குகளுக்கு கண்கள் கூசி பாதிக்கப்படுவதால், அரளிச் செடிகளை வளர்க்கவும், வளர்ந்துள்ள புற்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

