ADDED : ஆக 07, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் வேட்டை பெருமாள் கோயில் அருகே கம்மாபட்டியை சேர்ந்தவர் சுந்தரம்மாள் 60, நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்ற போது பின்னால் டூவீலரில் வந்த இளைஞர் சுந்தரம்மாள் கழுத்தில் இருந்த 8.5 பவுன் தங்கச் செயினனை பறித்துக் கொண்டு தப்பினார்.
தெற்கு போலீசார் சி.சி.டி.வி கேமரா மூலம் ஆய்வு செய்ததில் சென்னையில் கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஜமீன் கொல்லன் கொண்டானை சேர்ந்த வெள்ளத்துரை 27, என தெரிந்தது.
அவரிடம் இருந்த செயினை மீட்டு தெற்கு போலீசார் கைது செய்துள்ளனர்.