ADDED : மே 11, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : கோவை உப்புலிபாளையத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி 34. பணி நிமித்தம் காரணமாக நேற்று அதிகாலை 3:20 மணிக்கு விருதுநகர் பி.ஆர்.சி., டிப்போ அருகே பஸ்சில் வந்திறங்கினார்.
மதுரை ரோட்டில் உள்ள கே.வி.எஸ்., பள்ளி அருகே நடந்து சென்றபோது டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் ருத்ராட்சத்துடன் கூடிய சுமார் 2 பவுன் தங்கச் செயினை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.