ADDED : நவ 25, 2024 05:32 AM

காரியாபட்டி : காரியாபட்டி எம்.இலுப்பைகுளம் கண்மாயில் வளர்ந்துள்ள சம்பை செடிகளால் நோய் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காரியாபட்டி எம்.இலுப்பைகுளத்தில் கண்மாய், ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகளில் சம்பை செடிகள் வளர்ந்துள்ளன.
இதில் விஷ பூச்சிகள் தங்கி வருகின்றன. புதர்மண்டி கிடப்பதால் காட்டுப் பன்றிகள் தங்குகின்றன.
ஆட்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. இது ஒரு புறம் இருக்க, இதில் பூத்துள்ள பூக்களிலிருந்து துாசு காற்றில் பரவி உணவுப் பொருட்கள், குடிநீரில் கலக்கின்றன. கண்களில் பட்டு காயப் படுத்துகின்றன.
சுவாசிக்க முடியவில்லை. மூச்சு திணறல் ஏற்படுகிறது. உணவுகளை சாப்பிடும் போது, துாசுகளும் உணவுடன் கலப்பதால் உடல் உபாதை ஏற்பட்டு, பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது.
இதன் வேர்கள் நீண்ட தூரத்திற்குச் செல்வதால் நீர் கசிவு ஏற்பட்டு கண்மாயில் நீரை சேர்க்க முடியவில்லை.
மக்கள் பாதிக்கப்படும் முன் நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சம்பை செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.