/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வர மறுத்த மனைவியை கொன்ற கணவன் சரண்
/
வர மறுத்த மனைவியை கொன்ற கணவன் சரண்
ADDED : ஜன 19, 2024 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர், பர்மா காலனியை சேர்ந்தவர் செந்துாரப்பாண்டி, 42, சென்னையில் இரும்பு கடையில் பணிபுரிந்தார். விருதுநகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் கல்பனா, 38. இருவரும் காதல் திருமணம் செய்து, 14 ஆண்டுகளாக வாழ்ந்தனர்; இரு குழந்தைகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதால், இருவரும் ஓராண்டாக பிரிந்து வாழ்ந்தனர். கல்பனா விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.
நேற்று மதியம், 12:00 மணிக்கு கல்பனா வீட்டிற்கு வந்த செந்துாரப்பாண்டி, தன்னுடன் வருமாறு கூறி தகராறு செய்தார். போலீசார் வருவதற்குள் செந்துாரப்பாண்டி, கத்தியால் கல்பனாவை குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து, மேற்கு போலீசில் சரண் அடைந்தார்.