ADDED : அக் 19, 2025 09:40 PM

சாத்துார்: சாத்துார் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் துாய ஜெபமாலை அன்னை தேர் பவனி விழா நடந்தது.
திருவிழாவை முன்னிட்டு சர்ச் வண்ணத் தோரணங்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. துாய ஜெபமாலை அன்னையின் சொரூபம் வண்ண மலர் களால் அலங்கரிக்கப் பட்ட தேரில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து சர்ச்சை அடைந்தது.
பக்தர்கள் ஆவே மரியா புகழ் பாடியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பாதிரியார் காந்தி தலைமை யில் திருவிழா திருப் பலியும் மறையுரையும் நடந்தது. பிரான்ஸ் நாட்டில் உள்ள துாய லுார்து அன்னை ஆலயத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் தீர்த்தம் இறை மக்கள் மீது தெளிக்கப்பட்டது.
விருதுநகர், ஆர்.ஆர்., நகர், சிவகாசி, மீனம்பட்டி, பாளையங்கோட்டை, சாத்துார், சங்கராபுரம், இ. முத்துலிங்காபுரம், மணியம்பட்டி, கஞ்சம்பட்டி, பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர். சர்ச் திரு விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.