அனுமதியின்றி பட்டாசு: நால்வர் மீது வழக்கு
நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் அனுமதி இன்றி பட்டாசுகள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. திருச்சுழி தாசில்தார் கருப்பசாமி தலைமையில் வருவாய் துறையினர் பட்டாசு கடைகளை ஆய்வு செய்தனர். பஸ் ஸ்டாண்ட் அருகே உரிமம் பெறாமல் தற்காலிகமாக செட் அமைத்து, பட்டாசுகள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் வீர சோழன் முகமது காசிம், உமர் பாரூக், ஒட்டங்குளம் குஞ்சாரம், மினாக்குளம் கண்ணன் கூட்டாக விற்பனை செய்தது தெரிந்தது. ரூ.2 லட்சம் பட்டாசுகளை பறிமுதல் செய்து, வீரசோழன் போலீசில் ஒப்படைத்தனர். 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
லாரி டிரைவர் பலி
சாத்துார்: சாத்துார் ஆண்டாள்புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பசும்பொன் 31. லாரி டிரைவர். நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு கோவில்பட்டிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்று விட்டு ஊர் திரும்பினார். கோவில்பட்டி -- சாத்துார் ரோட்டில் சின்ன ஓடைப்பட்டி விலக்கருகே டூவீலர் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மீது மோதி கீழே விழுந்து சம்பவ இடத்தில் பலி யானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.