
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை 6 :00மணிக்கு தேரோட்டம் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மீனாட்சி சொக்கநாதருக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு தேரில் அமர்ந்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வடம் பிடித்தார். தேர்வு தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

