sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 சதுரகிரி தீ அணைப்பு

/

 சதுரகிரி தீ அணைப்பு

 சதுரகிரி தீ அணைப்பு

 சதுரகிரி தீ அணைப்பு


ADDED : பிப் 04, 2026 05:50 AM

Google News

ADDED : பிப் 04, 2026 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான சதுரகிரி மலை அருகே வெள்ளைப் பாறையில் நேற்று முன்தினம் இரவு பிடித்த தீயை வனத்துறையினர் அணைத்தனர்.

வத்திராயிருப்பு வனச்சரகம் வெள்ளை பாறை துாங்கான் கடவு பீட் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு மேல் காட்டுத் தீ பற்றியது. இதனை நெடுங்குளம், கூமாப்பட்டி, கொடிக்குளம் பகுதியில் இருந்து மக்கள் பார்க்க முடிந்தது.

வனச்சரகர் ரவீந்திரன் தலைமையில் வனக்காப்பாளர் பிரபு, வேட்டை தடுப்பு காவலர்கள் குழுவினர் இரவோடு இரவாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். தற்போது குளிர்ந்த தட்பவெப்ப நிலை நிலவும் நிலையில் வனப் பகுதியில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us