/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சத்திரப்பட்டி -- ஓ.மேட்டுப்பட்டி குண்டும் குழியுமான ரோடு
/
சத்திரப்பட்டி -- ஓ.மேட்டுப்பட்டி குண்டும் குழியுமான ரோடு
சத்திரப்பட்டி -- ஓ.மேட்டுப்பட்டி குண்டும் குழியுமான ரோடு
சத்திரப்பட்டி -- ஓ.மேட்டுப்பட்டி குண்டும் குழியுமான ரோடு
ADDED : மார் 14, 2024 11:46 PM

சாத்துார் : சாத்துார் அருகே சத்திரப்பட்டி - ஓ.மேட்டுப்பட்டி ரோடு குண்டும் குழியுமாக கரடு முரடாக உள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாத்துாரில் இருந்து சத்திரப்பட்டி வழியாக ஓ மேட்டுப்பட்டிக்கு நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட தடவை பஸ்கள், வேன்கள், சென்று வருகின்றன.
சத்திரப்பட்டியில் இருந்து ஒ. மேட்டுப்பட்டிக்கு பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக உள்ளது.
கால்களை பதம் பார்க்கும் வகையில் ஜல்லிக்கற்கள் ரோட்டில் பரவி கிடக்கின்றன. நடந்து செல்லும் பாதசாரிகளும் இருசக்கர வாகன ஓட்டிகளும் கற்களால் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.
குண்டும் குழியுமாக உள்ள ேராட்டில் சிறிய மழை பெய்தாலும் பள்ளம் மேடு தெரியாத வகையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
மழை நீர் பள்ளத்தில் தேங்கி நிற்கும் நிலையில் வேகமாக வரும் டூவீலர் ஓட்டிகள், மூன்று, சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தால் கவிழ்ந்து விபத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த ரோடு வழியாக ஓ. மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே சேதம் அடைந்த நிலையில் உள்ள இந்த சாலையில் புதியதாக தார் ரோடு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

