/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வனவிலங்கு வேட்டையை கட்டுப்படுத்த வனப்பகுதிகளுக்கு செல்லும் பாதைகளில்...சோதனை சாவடி
/
வனவிலங்கு வேட்டையை கட்டுப்படுத்த வனப்பகுதிகளுக்கு செல்லும் பாதைகளில்...சோதனை சாவடி
வனவிலங்கு வேட்டையை கட்டுப்படுத்த வனப்பகுதிகளுக்கு செல்லும் பாதைகளில்...சோதனை சாவடி
வனவிலங்கு வேட்டையை கட்டுப்படுத்த வனப்பகுதிகளுக்கு செல்லும் பாதைகளில்...சோதனை சாவடி
ADDED : ஆக 30, 2025 05:36 AM

ஸ்ரீவில்லிபுத்துார்- மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரக வனச் சரணாலயப் பகுதியில் நீரோடைகள் மற்றும் காப்புக்காடுகள் அதிகம் உள்ளன். இதனால் யானைகள், மிளா, மான்கள், காட்டுப்பன்றி, சிறுத்தை, கரடி, காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பல்வேறு பறவை இனங்கள் உட்பட பல வகையான வன உயிரினங்கள் வாழ்விடமாக திகழ்கிறது.
இந்நிலையில் கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மலைப்பகுதியில் இருந்த நீராதாரங்கள் வற்றி வருகின்றன. இதை அடுத்து தண்ணீர் மற்றும் உணவை தேடி காட்டு மாடுகள், மான்கள், காட்டுப்பன்றிகள் மலையை ஓட்டி உள்ள விளை நில பகுதியை நோக்கி நகர்கின்றன. இதை எதிர்பார்த்து வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபடும் சமூக விரோதிகள் பட்டா நிலங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள் போர்வையில் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர். இவர்களின் போக்கு வன உட்பகுதி வரை வேட்டைக்கான விலங்குகளை தேடி செல்லும் நிலை உள்ளது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் பறந்து விரிந்துள்ள வனப்பகுதியில் சில நூறு வனக்காவலர்கள் மூலம் கண்காணித்து கட்டுப்படுத்தும் செயல் முழுமை அடையவில்லை. இதற்கு சமீப காலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையில் நாய்கள் மூலம் மான் வேட்டையில் ஈடுபட்ட நாலு பேர், சேத்தூர் அருகே கணபதி சுந்தர் நாச்சியார் புறத்தில் மான் வேட்டையாடு இறைச்சி சமைத்ததாக 5 பேர், ஒரு வாரம் முன் ஸ்ரீவில்லிபுத்துாரில் போலீஸ் ஒருவர் நாட்டு துப்பாக்கி வைத்து வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு வந்தது, சேத்துார் அடுத்த தேவதானம் வனப்பகுதி உள்ளே எஸ்டேட்டில் நாட்டு துப்பாக்கி உபயோகித்து வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டதாக 7 பேர் கைது உட்பட்ட சம்பவங்களை உதாரணமாக உள்ளன.
வனப்பகுதிக்கு உள்ளே செல்லும் பாதைகளான ராஜபாளையம் அய்யனார் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பு ரோடு, மாவூத்து பாதை, அத்திக்கோயில், பிளவக்கல் நீர்தேக்க பாதை, தேவதானம் அசையா மணி விலக்கு உள்ளிட்ட வனப்பகுதிக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போலீஸ் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பதன் மூலம் பெருகிவரும் வன விலங்கு வேட்டைகளை தடுக்க முடியும்.

