/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊரகப்பகுதிகளில் முளைக்கும் வேதிப்பொருள் குப்பை; மக்கள் அச்சம்
/
ஊரகப்பகுதிகளில் முளைக்கும் வேதிப்பொருள் குப்பை; மக்கள் அச்சம்
ஊரகப்பகுதிகளில் முளைக்கும் வேதிப்பொருள் குப்பை; மக்கள் அச்சம்
ஊரகப்பகுதிகளில் முளைக்கும் வேதிப்பொருள் குப்பை; மக்கள் அச்சம்
ADDED : மார் 15, 2024 06:26 AM

விருதுநகர் : விருதுநகரின் நான்கு வழிச்சாலை ஓர ஊரக பகுதிகளில் இரவோடு இரவாக வேதி பொருட்கள் வேதி பொருள் குப்பை கொட்டி செல்வதால் அவை மருத்துவ கழிவா அல்லது கடுமையான வேதி பொருளா என தெரியாமல் கிராமத்தினர் அச்சப்படுகின்றனர்.
விருதுநகரின் நான்கு வழிச்சாலை பகுதிகளில் குப்பை கொட்டுவது பெரும் சுகாதாரக்கேடாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு சில பகுதிகளில் இரவோடு இரவாக வேதி பொருள் அல்லது மருந்து இருந்த கண்ணாடி பீங்கான்கள் ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டு நான்கு வழிச்சாலை ஓர ஊரக பகுதிகளில் கொட்டப்படுகிறது.
இதனால் குப்பையை கொட்டியதோடு மட்டுமின்றி எரித்து விட்டும் செல்கின்றனர். இதனால் காலை நேரங்களில் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்கள் அச்சத்துடனே இந்த குப்பையை பார்க்கின்றனர். வேதி, மருந்து பொருள் குப்பையை முறைப்படி அகற்றாமல், இது போன்று ரோட்டோரங்களில், கிராமங்களில் கொட்டி செல்வது சுகாதார பாதிப்பை அதிகரிக்கிறது. விருதுநகர் அய்யனார் நகர் பகுதியில் கொட்டப்பட்ட இந்த குப்பையால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டனர். ஸ்டிக்கர்கள் கிழிக்கப்பட்ட பாட்டில்களாக இருப்பதால் வேறு ஏதேனும் அபாயகரமான வேதி பொருளா என அச்சப்படுகின்றனர். இல்லை மருத்துவ கழிவுகள் தானா என்றும் மக்களுக்கு தெரியவில்லை.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டும். இது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டு வேதி பொருள் குப்பை கொட்டுவோர் மீது கடுமையான அபராத நடவடிக்கை எடுக்க வேண்டும்.

