/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செங்கமலப்பட்டியில் பாலம் 3 ஆண்டுகளிலே சேதம்
/
செங்கமலப்பட்டியில் பாலம் 3 ஆண்டுகளிலே சேதம்
ADDED : நவ 25, 2024 05:54 AM

சிவகாசி : சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட புதிய பாலம் சேதமடைந்து இருப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் இருந்து சூரம்பட்டி வழியாக அனுப்பன்குளம், நாரணாபுரம், ஆலமரத்துப்பட்டி, செங்கமலப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு விருதுநகருக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்களும் இந்த ரோட்டில் தான் சென்று வருகின்றனர். இதே ரோட்டில் 50க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. தொழிலாளர்களை ஏற்றி வரும் வாகனங்களும் இந்த ரோட்டில் தான் வர வேண்டும்.
இந்நிலையில் செங்கமலப்பட்டி மயானம் அருகே ஓடையில் இருந்த தரைப்பாலம் சேதம் அடைந்திருந்தது. வாகன ஓட்டிகள் சிரமப்பட்டதால் மூன்று ஆண்டுகளுக்கு தரைப்பாலம் இடிக்கப்பட்டு மேம்பாலமாக கட்டப்பட்டது. இந்நிலையில் மேம்பாலத்தில் மேற்பகுதியில் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சேதம் அடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.