/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சென்னை - செங்கோட்டை பொதிகை ரயில் நேரம் மாற்றம்
/
சென்னை - செங்கோட்டை பொதிகை ரயில் நேரம் மாற்றம்
ADDED : டிச 31, 2025 05:46 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: செங்கோட்டைக்கு இயங்கும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (ஜன. 1) முதல் சென்னையில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதால் விருதுநகர் மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்துள்ள னர்.
இன்று வரை தினமும் இரவு 8:10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக விருதுநகருக்கு காலை 4:23, திருத்தங்கல் 4:39, சிவகாசி 4:43, ஸ்ரீவில்லிபுத்தூர் 4:59, ராஜபாளையம் 5:13 மணிக்கு வந்து காலை 7:25 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் வகையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது.
இந்த ரயில் நாளை ஜன. 1 முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தினமும் சென்னை எழும்பூரில் இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு விருதுநகர் அதிகாலை 3:38, திருத்தங்கல் 3:54, சிவகாசி 04:03, ஸ்ரீவில்லிபுத்தூர் 04:24, ராஜபாளையம் 04:38 மணிக்கு வந்து காலை 06:40 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.
இதனால் சென்னையிலிருந்து புறப்படும் அரசு, தனியார் ஊழியர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு புறப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நகரங்களிலும் நள்ளிரவு நேரத்தில் இறங்க வேண்டியது இருப்பதால் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கும்.
மேலும் அந்நேரம் எந்தவித பஸ் வசதியும் இல்லாததால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து தான் வீடுகளுக்கு செல்ல முடியும்.
இதனால் விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு உடமைக்கும், உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலையும், கூடுதல் பண விரயத்தை ஏற்படுத்தும் என மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதற்கு மாற்றாக, சென்னை எழும்பூரில் இருந்து தற்போது வாரத்தில் 3 நாட்கள் இரவு 9:00 மணிக்கு புறப்படும் செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை, தினசரி ரயிலாக மாற்றம் செய்து, இரவு 7:35 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8:35 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் வகையில் இயக்க வேண்டும்.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேர மாற்றத்தை ரத்து செய்து, வழக்கமான நேரத்தில் இயங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விருது நகர் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

