/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் ரூ.350 கோடியில் சிப்காட் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
/
அருப்புக்கோட்டையில் ரூ.350 கோடியில் சிப்காட் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அருப்புக்கோட்டையில் ரூ.350 கோடியில் சிப்காட் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அருப்புக்கோட்டையில் ரூ.350 கோடியில் சிப்காட் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : நவ 11, 2024 03:57 AM

விருதுநகர்: 'அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கர் பரப்பில் ரூ.350 கோடியில் சிப்காட் அமைக்கப்படும். இதனால் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
நலத்திட்ட விழாவில் மாவட்டத்திற்கு செய்யப்பட உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அவர் பேசியதாவது: மாவட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் முன்னணியில் உள்ளது. விவசாயமோ நீர்நிலைகளை நம்பி உள்ளது.
காரியாபட்டி, திருச்சுழி வட்டங்களில் உள்ள கண்மாய்கள் ரூ.18 கோடியில் மராமத்து செய்யப்படும். காரியாபட்டி தெற்காற்றின் குறுக்கே ரூ.21 கோடியில் புதிய அணை கட்டப்படும்.
விருதுநகர் கவுசிகா நதி, அருப்புக்கோட்டை கஞ்சம் பட்டி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் ரூ.41 கோடியில் சீரமைக்கப்படும். வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதியில் உள்ள 22 கண்மாய்கள் ரூ.18.10 கோடியில் புனரமைக்கப்படும். அதே போல் வெம்பக்கோட்டை கலங்காப்பேரி, ஆனைக்குட்டம், கோல்வார்பட்டி அணைகள் ரூ.23.30 கோடியில் சீரமைக்கப்படும். அணை பகுதியில் ரூ.2 கோடியே 74 லட்சத்திற்கு சுற்றுலா பூங்காக்கள் அமைக்கப்படும்.
மாவட்டத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வித்திட கூடிய வகையில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அருப்புக்கோட்டை அருகே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது 400 ஏக்கர் பரப்பில் ரூ.350 கோடியில் அமைக்கப்படும். இதனால் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சிவகாசி மாநகராட்சியில் ரூ.15 கோடி நவீன வசதிகளுடன் மாநாட்டு கூட்டரங்கம் அமைக்கப்படும். விருதுநகர் நகராட்சியில் ரூ.24 கோடியே 50 லட்சம் செலவில் ரோடு, மழைநீர் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படும்.
சாத்துார் நகராட்சியில் ரூ.2 கோடியில் பூங்கா, சிறுபாலம் அமைக்கப்படும். ராஜபாளையம் நகராட்சியில் ரூ.13 கோடியில் மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படும். அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.3 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் பக்தர்கள் வசதிக்காக வாகன நிறுத்தும் இடம், கழிப்பறை ரூ.2.10 கோடிக்கு அமைக்கப்படும். வத்திராயிருப்பு பிளவக்கல் அணை பகுதியில் ரூ.10 கோடிக்கு பூங்கா மேம்பாட்டு பணிகள் அமைக்கப்படும்.
சாஸ்தா கோயில் அருகே ரூ.1.70 கோடிக்கு மேம்பாட்டு பணிகள், மாவட்டத்தின் இரு அமைச்சர்களும் இத்தனை அறிவிப்புகளை பெற்றுள்ளீர்கள். இந்த அறிவிப்புகளுக்கு விரைந்து அரசாணை பெற்று பணிகளை துவங்க கவனம் செலுத்த வேண்டும், என்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் மாதவன், துணை தலைவர் தனலட்சுமி துளசிராமன், கமிஷனர் சுகந்தி, தி.மு.க., மாவட்ட அமைப்பாளர் ராஜகுரு, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளி ராஜன், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநில வர்த்தக அணி வனராஜா.
ஒன்றிய செயலாளர் விவேகன் ராஜ், தங்கராஜ், கோபி கண்ணன், பகுதி செயலாளர் ஞானசேகரன், சித்துராஜபுரம் ஊராட்சி தலைவர் லீலாவதி சுப்புராஜ், அனுப்பன்குளம் ஊராட்சி தலைவர் கவிதா பாண்டியராஜ், 6வது பகுதி கழகம் நிர்வாகி மைக்கேல்.
40வது வட்ட செயலாளர் விக்னேஷ் பிரபாகரன், ஸ்ரீவில்லிபுத்துார் நகர செயலாளர் அய்யாவு பாண்டியன், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பாராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், தெற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் பிரபாகரன், அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி.
துணை தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகுராமானுஜம், அருப்புக்கோட்டை நகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,