/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வித்தியாசமானவர் முதல்வர் ஸ்டாலின்
/
வித்தியாசமானவர் முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஏப் 13, 2025 07:15 AM
அருப்புக்கோட்டை : மற்ற மாநில முதல்வர்களை விட நாம் முதல்வர் வித்தியாசமானவர், மக்கள் நலனில் தொலைநோக்கு பார்வை உள்ளவர் என, அருப்புக்கோட்டையில் நடந்த கனவு இல்லம் திட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
விழாவில் 167 பேர்களுக்கு அரசாணை வழங்கி பேசியதாவது :மற்ற முதல்வர்களுக்கும் நமது முதல்வருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எதையெல்லாம் செய்ய நினைத்தாரோ அதை எல்லாம் செய்கிற முதலமைச்சராக நம் முதல்வர் இருக்கிறார். 2030 ஆண்டிற்குள் 8 லட்சம் பேருக்கு வீடு வழங்க உள்ளார்.
50 ஆண்டுகளாக தொகுதி மக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். சலிக்காமல் எனக்கு ஓட்டு போடுகிறீர்கள். உங்களுக்கு வேண்டியதை செய்து தரும் அரசாக உள்ளது. உடன், அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

