/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழந்தை திருமணம்; சிறுமி கர்ப்பம் கணவர், பெற்றோர் மீது போக்சோ
/
குழந்தை திருமணம்; சிறுமி கர்ப்பம் கணவர், பெற்றோர் மீது போக்சோ
குழந்தை திருமணம்; சிறுமி கர்ப்பம் கணவர், பெற்றோர் மீது போக்சோ
குழந்தை திருமணம்; சிறுமி கர்ப்பம் கணவர், பெற்றோர் மீது போக்சோ
ADDED : ஆக 11, 2025 03:25 AM
விருதுநகர்: விருதுநகரில் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த குழந்தை திருமணத்தால் 17 வயதுடைய சிறுமி கர்ப்பமானார். விருதுநகர் மகளிர் போலீசார் கணவர், பெற்றோர் உட்பட 6 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிந்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, 2024ல் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்தார். இவரின் தாய் வேலை செய்த ஓட்டலுக்கு அடிக்கடி வந்து சென்ற லோடுமேன் ஒருவருடன், சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இந்த காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்து இருவருக்கும் 2024 நவ. 29ல் விருதுநகரில் திருமணம் செய்து வைத்தனர். சிறுமி கர்ப்பமாகி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஆதார் அட்டையில் இருந்த பிறந்த தேதியின் படி சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததால் கர்ப்பமானது கண்டறியப்பட்டது. விருதுநகர் மாவட்ட சமூகநலத்துறையின் பரிந்துரையில் விருதுநகர் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை செய்து கணவர், மாமனார், மாமியார், சிறுமியின் தாய், உறவினர் தம்பதி உட்பட 6 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிந்தனர்.