ADDED : மார் 23, 2025 07:20 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : - கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளியில் மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கிய கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான குழந்தைகள் இலக்கியத் திருவிழா நடந்தது.
முதல் நாள் விழாவில் சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இலக்கிய திருவிழாவை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
எழுத்தாளர் பவா செல்லத்துரை, கதை ஆசிரியர் நீதிமணி, எழுத்தாளர் சரவணன், பொம்மலாட்ட கலைஞர் ரதி, வீரராஜ், மனநல மருத்துவர்கள் சிவபாலன், மந்திரி குமார், சாகித்ய அகாடமி எழுத்தாளர் உதயசங்கர், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பேசினர்.
விழாவில் பல்கலை கழக வேந்தர் ஸ்ரீதரன், துணை தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், பள்ளி முதல்வர் அல்கா சர்மா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இரண்டாம் நாள் விழாவில் நிகழ்வில் மதுரை எம்.பி. வெங்கடேசன் காணொளி மூலமும், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் பேசினர்.