/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
10 ஆண்டுக்குப்பின் ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை
/
10 ஆண்டுக்குப்பின் ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை
10 ஆண்டுக்குப்பின் ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை
10 ஆண்டுக்குப்பின் ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை
ADDED : டிச 25, 2025 06:06 AM

ராஜபாளையம்: வடக்கு சீனா,தென்கிழக்கு சைபீரியா நாட்டை சேர்ந்த குளிர்கால பறவையான அமுர் வல்லுாறு ராஜபாளையத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் நேச்சர் கிளப்-பை சேர்ந்த பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள நீர் நிலைகள், ஏரி, குளங்களில் பல கட்டங்களாக பல்வேறு நாடுகளில் இருந்து அரிய வகை பறவைகள், காட்டு பறவைகள் உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் முகாமிடும்.
இவற்றை பறவை ஆர்வலர்கள் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்து வருகின்றனர். ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி, ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் நேச்சர் கிளப் உறுப்பினர்கள் இச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் பறவைகள் வலசை பற்றி கண்டறிதல் ஆய்வின்போது சீனா மற்றும் தென்கிழக்கு சைபீரியா நாட்டை சேர்ந்த அரிய வகை பறவையான அமுர் வல்லுாறு இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேச்சர் கிளப் ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு கூறியது: நேச்சர் கிளப்-பை சேர்ந்த பறவை ஆர்வலர்கள் விஷ்ணு சங்கர், வினோத், பிரணவ், நரேந்திரன், ரகுராம், சசி குழுவினரோடு வழக்கமான பறவை நோக்குதலை மேற்கொண்டபோது இந்த அரிய பறவை ராஜபாளையம் நகராட்சி ஆறாவது மைல் நீர் தேக்கம் அருகே தென்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் வர்தா புயலின் போது இவை கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் தற்போது தான் இந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது.
வல்லுாறு குடும்பத்தைச் சேர்ந்த கொன்றுண்ணி பறவையான இது சைபீரியா மற்றும் சீனாவில் அதிகம் உள்ளன. கூட்டம் கூட்டமாக இந்தியா மற்றும் அரேபியா கடலை தாண்டி தெற்கு ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தை கழிக்கின்றன. ஆண் அடர் சாம்பல் நிறத்திலும் தொடைகள் மற்றும் அடிவால் பகுதியில் சிவந்த பழுப்பு நிறத்திலும் கண் வளையம் அழகு பூ மற்றும் பாதங்கள் சிவந்த ஆரஞ்சு நிலத்திலும் காணப்படும். பெண் இனத்தில் மேல்புறம் அங்கே நிறத்திலும் அடிப்பகுதியில் வெண்மையாகவும் காணப்படும்.
நீண்டஆண்டுகளுக்குப்பின் ராஜபாளையத்தில் தென்பட்டுள்ளதற்கு காரணம் கடந்த சில ஆண்டுகளாக தொடர் குளிர்ச்சி உள்ளிட்ட கால நிலை மாற்றம் காரணமாக இருக்கலாம். அரிய வகையான வல்லுாறு வர்தா புயலுக்கு பின் தென்பட்டுள்ளது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது ,என்றார்.

