/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெளியூர் செல்வோர் போலீஸ் ஸ்டேஷனில்.. சொல்லிட்டு போங்க... ! திருட்டை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்க
/
வெளியூர் செல்வோர் போலீஸ் ஸ்டேஷனில்.. சொல்லிட்டு போங்க... ! திருட்டை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்க
வெளியூர் செல்வோர் போலீஸ் ஸ்டேஷனில்.. சொல்லிட்டு போங்க... ! திருட்டை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்க
வெளியூர் செல்வோர் போலீஸ் ஸ்டேஷனில்.. சொல்லிட்டு போங்க... ! திருட்டை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்க
ADDED : டிச 25, 2025 06:03 AM

விருதுநகர், விருதுநகர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு வெளியூர் செல்வோர் போலீசில் தகவல் தெரிவிப்பதில்லை. இதுபோன்ற அலட்சியங்களால் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. இதைத் தடுக்க பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 55 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற தொடர் விடுமுறைக்கு குடும்பத்தோடு வெளியூர் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உறவினர்கள் வீடுகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் உள்ள சுற்றுலா, ஆன்மிக தலங்களுக்கும் செல்வர். இப்படி செல்பவர்கள் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்தால் அவர்களின் வீடு, உடமைகளை பாதுகாப்பது போலீசாரின் கடமை.
எத்தனை நாட்கள் வெளியூர் செல்கிறோம், புறப்படும், திரும்பி வரும் நாட்கள் குறித்து முன்கூட்டியே போலீசாரிடம் தெரிவித்தால் இரவில் ரோந்து செல்கையில் பூட்டிய வீடுகளை 'ஸ்பெஷலாக' கவணித்து திருட்டு நடக்காத வண்ணம் பாதுகாப்பர்.
ஆனால் பலருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் வெளியூர் செல்கையில் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதில்லை. இதன்காரணமாக வழக்கமான ரோந்து பணிகளில் மட்டும் போலீசார் ஈடுபடுவதால் சூழ்நிலைகளை பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டிவிடுகின்றனர். திருட்டு சம்பவங்கள் நடந்தபின் வழக்கு பதிந்து விசாரிப்பதை விட முன்கூட்டியே தகவல் கூறும் பட்சத்தில் திருட்டை தடுப்பது எளிது.
எனவே தங்கள் எல்லைக்குள் வீட்டை பூட்டி வெளியூர் செல்பவர்கள் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்கும் வகையிலும், பொது மக்கள் மத்தியில் நிலவும் அச்சம், தயக்கங்களை போக்கவும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மக்களும் போலீசாரும் இணைந்து செயல் பட்டால் மட்டுமே திருட்டு சம்பவங்களை தடுக்க இயலும்.

