/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிப் டூ ஸ்டார்ட் அப் ஆய்வக திறப்பு விழா
/
சிப் டூ ஸ்டார்ட் அப் ஆய்வக திறப்பு விழா
ADDED : டிச 10, 2025 09:17 AM
சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்.,பொறியியல் கல்லுாரியில் மத்திய அரசின் நிதி உதவியுடன் ரூ. 3 கோடியில் சிப் டூ ஸ்டார்ட் அப் ஆய்வக திறப்பு விழா நடந்தது.
மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பெங்களூர் சி டாக் நிறுவனம் சார்பில் கல்லுாரி மாணவர்களின் செமி கண்டக்டர் துறையில் சிப் டூ ஸ்டார்ட் அப் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது.
இதற்காக தமிழக அளவில் 47 சிறந்த பொறியியல் கல்லுாரிகளை தேர்வு செய்தனர். இதில் தென் தமிழகத்திலேயே பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி மட்டும் தேர்வாகியுள்ளது.
இந்த அமைப்பின் மூலம் கல்லுாரியில் ரூ. 3 கோடியில் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்கள் தாளாளர் சோலைசாமி திறந்து வைத்தார்.
கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஷ்வரி, டீன் மாரிசாமி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் வளர்மதி, வினோத், மோகன், பேராசிரியர்கள் செய்தனர்.

