/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ், ரோடு, ரேஷன்கடை, அலைபேசி சிக்னல் வசதிகள் இல்லை அவதியில் தென்றல் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புவாசிகள்
/
பஸ், ரோடு, ரேஷன்கடை, அலைபேசி சிக்னல் வசதிகள் இல்லை அவதியில் தென்றல் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புவாசிகள்
பஸ், ரோடு, ரேஷன்கடை, அலைபேசி சிக்னல் வசதிகள் இல்லை அவதியில் தென்றல் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புவாசிகள்
பஸ், ரோடு, ரேஷன்கடை, அலைபேசி சிக்னல் வசதிகள் இல்லை அவதியில் தென்றல் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புவாசிகள்
ADDED : டிச 10, 2025 09:17 AM
- U ராஜபாளையம்: ராஜபாளையம் தென்றல் நகர் மெயின் ரோடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் பஸ், ரோடு, ரேஷன்கடை, அலை பேசி சிக்னல் வசதிகள் கிடைக்காமல் குடியிருப்புவாசிகள் எண்ணற்ற பிரச்சனைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
இதுகுறித்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் காளீஸ்வரி, சுமதி, மாரியம்மாள், மாரியப்பன், சிவகாமி, பிரபாவதி, சத்யா கூறியதாவது:
மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு உருவாகி 2 வருடங்களுக்கு மேல் ஆகியும் அடிப்படை வசதி எதுவும் இல்லை. 864 குடும்பங்கள் வாழ்ந்து வரும் அமைப்பில் அடிப்படை தேவையான அலை பேசி டவர் பிரச்சனை இருப்பதால் அவசரத்திற்கும் ஒருவரையும் தொடர்பு கொள்ள வழியில்லை. பழைய காலம் போல் மொட்டை மாடிக்கு அலைபேசியை கொண்டு அலைய வேண்டி உள்ளது.
நகர் பகுதியில் தொடர்பு கொள்ள பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்களை எதிர்பார்த்தும் அவசர தேவைக்கு அதிக செலவழித்தும் செல்ல வேண்டியிருக்கிறது.
முன்பு போட்ட தார் ரோடு செதில்களாக வெளியேறி வருகிறது. தற்போதைய மழைக்கு அதன் நிலை சிக்கலை ஏற்படுத்துவதுடன், குடியிருப்புகளில் இருந்து மெயின் ரோட்டிற்கான ரோடு வசதி இதுவரை செய்து தரவில்லை. மேடு பள்ளங்களில் பயணித்து செல்வதுடன் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும் வருவதற்கு யோசிக்கின்றன.
இதே நிலை மின்விளக்கு தேவையிலும் உள்ளதால் பொழுது சாய்ந்ததும் ஆண் துணை இன்றி வெளியே செல்ல முடியவில்லை.
குப்பை வாங்க துாய்மை பணியாளர்கள் வரும்போது வெளியேற முடியாத நேரத்தில் வெளியிடங்களில் துாக்கி எறிவதால் சுகாதார பிரச்சனை ஏற்படுகிறது. ஒவ்வொரு பிளாக்கிற்கும் குப்பை தொட்டி அமைத்தால் தேவையற்ற சிக்கல் சரி செய்யலாம்.
ஏற்கனவே கொடுத்த வாக்குறுதி படி ரேஷன் கடை ஏற்படுத்தாததால் பழைய இடங்களிலேயே முகவரி மாற்றாமல் வைத்துள்ளனர்.
இரண்டு கிராமம் அளவுக்கு உள்ள இக் குடியிருப்புக்கு தேவையான பாதுகாப்பு கருதி சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்கவில்லை.
ஒவ்வொரு முறை நிதி ஒதுக்கீட்டின் போது மட்டும் அரசியல் கட்சியினர் வந்து விளம்பரத்திற்கு தலைகாட்டி செல்வது தொடர்வதால் அடித்தட்டு மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியினரின் சிக்கல் தீர்ந்தபாடில்லை., என்றனர்.

