/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி
ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி
ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி
ADDED : டிச 10, 2025 09:18 AM
விருதுநகர்: 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முன்பாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் சரிபார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதால் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் டிச. 11ல் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் முதல் நிலை சரிபார்ப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளது.
அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் முகவர்கள் காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை நேரில் பார்வையிடலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.