ADDED : மார் 02, 2026 06:23 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர் கோயில் மாசி மக பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
மாசி மகத்தை முன்னிட்டு பிப்.21ல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அன்னம், கிளி, யானை, ரிஷபம் பூப்பல்லக்கு உள்ளிட்ட அலங்கார வாகனங் களில் சுவாமி பக்தர் களுக்கு காட்சியளித்தார்.
விழா நாட்களில் இன்னிசை, பாராயண நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், தெப்போற் ஸவத்தை தொடர்ந்து தேர் திருவிழா நேற்று நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட தேரினை தரிசனத்திற்காக ராமமந்திரம் வரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்று பின் கோயிலை சுற்றி நிலையை அடைந்தது.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா குடும்பத்தினர் செய்து இருந்தனர்.

