/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சம்பளம் வழங்காததை கண்டித்து சோழபுரம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
/
சம்பளம் வழங்காததை கண்டித்து சோழபுரம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
சம்பளம் வழங்காததை கண்டித்து சோழபுரம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
சம்பளம் வழங்காததை கண்டித்து சோழபுரம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : அக் 01, 2024 04:38 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சோழபுரம் ஊராட்சியில் 100 நாள் திட்ட பணியாளர்கள் சிலருக்கு மட்டும் ஊதியம் வழங்கவில்லை என குற்றம் சாட்டி பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட மேலுார், கீழூர், ஆவரந்தை, புது காலனி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.
கீழூர் பகுதியில் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் இவர்களுக்கு கடந்த இரண்டு வாரங்களாக வேலை செய்ததற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படவில்லை என கூறி 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி அலுவலகத்தில் கூடி தலைவர் மாரீஸ்வரி, செயலர் வேல்முருகனிடம் கேள்வி கேட்டனர்.
ஊராட்சி ஒன்றிய பதிவில் குழப்பம் ஏற்பட்டதாக கூறி அலுவலகத்தை பூட்டி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பு தொகை சரி பார்க்கவில்லை
மாரீஸ்வரி, ஊராட்சி தலைவர், சோழபுரம்: 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் போடும்போது இருப்புத்தொகை சரியாக கவனிக்காததால் இத் தவறு நடந்துள்ளது. விடுபட்டவர்களுக்கு சம்பளத் தொகை பட்டு வாடா செய்ய ஒதுக்கப்பட்டு விட்டது.