ADDED : ஜூன் 17, 2025 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் சூலக்கரை அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது.
சூலக்கரை அந்தோணியார் சர்ச் திருவிழா ஜூன் 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மிக்கேல் அதிதுாதர், அந்தோணியார் உருவங்கள் வண்ண மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மின் அலங்காரத் தேர்பவனி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
இறுதியில் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை நிறைவாழ்வு நகர் பாதிரியார் அந்தோணிசாமி அடிகள் தலைமையில், சூலக்கரை திருச்சிலுவை கன்னியாஸ்திரிகள், சூலக்கரை புனித அந்தோனியார் அன்பியம், நிறைவாழ்வு நகர் பங்கு இறைமக்கள் செய்தனர்.