/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜய கரிசல்குளம் அகழாய்வில் வட்ட சில்லுகள் கண்டெடுப்பு
/
விஜய கரிசல்குளம் அகழாய்வில் வட்ட சில்லுகள் கண்டெடுப்பு
விஜய கரிசல்குளம் அகழாய்வில் வட்ட சில்லுகள் கண்டெடுப்பு
விஜய கரிசல்குளம் அகழாய்வில் வட்ட சில்லுகள் கண்டெடுப்பு
ADDED : பிப் 01, 2025 01:50 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் பெண்கள் விளையாடும் வட்ட சில்லுகள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டது.
இங்கு மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3280 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது அதிக அளவிலான வட்ட சில்லுகள் பல்வேறு அளவுகளில் கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில்'' முன்னோர் இப்பகுதியில் வசித்து தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றது. அதே சமயத்தில் பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அந்த வகையில் ஏராளமான சுடுமண் ஆட்ட காய்கள் கிடைத்துள்ளது. மேலும் பெண்கள் பாண்டி விளையாட பயன்படும் வட்ட சில்லுகள் அதிக அளவில் கிடைத்து வருகின்றது'' என்றார்.