ADDED : ஆக 02, 2025 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: தேர்தல் கால வாக்குறுதிப்படி ரேஷன் திட்டத்தை தனி துறையாக அறிவிப்பது, பொருட்களை பொட்டலமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., விருது நகர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்வாகிகள் பொன்ராஜ், ரமேஷ், மகேஸ்வரி ஆகியோர் தலைமையேற்றனர். நிர்வாகிகள் செல்லச்சாமி, கார்த்திகேயன், வேலுமணி, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் தேவா பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் ராமசாமி, செயலாளர் முனியாண்டி பேசினர்.