ADDED : அக் 12, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் எட்டூர் வட்டம் டோல்கேட்டில் துாய்மை பணி நடந்தது.
மத்திய அரசின் ஸ்வாட்சா சாட் ஹி சேவா -2024 திட்டத்தின் கீழ் தேசிய நான்கு வழிச்சாலையில் அக்.2 முதல் 31 வரை துாய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. எட்டூர் வட்டம் டோல்கேட் முதல் கப்பலுார் வரையிலான நான்கு வழிச்சாலையில் துப்புரவு பணிகள் நடந்து வருகிறது.
ரோட்டில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றினர். நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இடம் குப்பைகளை வெளியே கொட்டுவதை தவிர்க்கவும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். மேலும் நான்கு வழிச்சாலை பாலங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டது.

