/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனையில் மூடி கிடக்கும் சுகாதார வளாகம்: நோயாளிகள் அவதி
/
அரசு மருத்துவமனையில் மூடி கிடக்கும் சுகாதார வளாகம்: நோயாளிகள் அவதி
அரசு மருத்துவமனையில் மூடி கிடக்கும் சுகாதார வளாகம்: நோயாளிகள் அவதி
அரசு மருத்துவமனையில் மூடி கிடக்கும் சுகாதார வளாகம்: நோயாளிகள் அவதி
ADDED : செப் 08, 2025 05:36 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சுகாதார வளாகம் பூட்டப்பட்டுள்ளதால் திறந்த வெளியை உபயோகிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 120 படுக்கை வசதிகளுடன் செயல்படும் இம் மருத்துவமனையை தரம் உயர்த்தும் விதமாக புதிதாக 220 படுக்கை வசதியுடன் புதிய கட்டடம் கட்டுமான பணி முடிந்து செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
மருத்துவ வளாகத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் எண்ணுார் துறைமுக நிறுவனத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பில் ரூ.5 லட்சம் செலவில் ஆண் பெண் நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகம் பூட்டு போடப்பட்டு உள்ளது.
இதனால் நோயாளிகள், உதவியாளர்கள், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதுடன் அருகாமை பகுதியை திறந்த வெளியாக உபயோகித்து வருகின்றனர்.
இது குறித்து கணேசன்: தினமும் 500க்கும் அதிகமான வெளி நோயாளிகளும் நுாற்றுக்கும் அதிகமான உள் நோயாளிகள் அவர்களைக் காண என ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். அடித்தட்டு மக்கள் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து பயனாளிகளாக மருத்துவமனையை அணுகும் நிலையில் வளாகத்தில் உள்ள சுகாதார வளாகம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் திறந்த வெளியை பயன்படுத்துவதால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.