/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்செந்துார் கோவிலுக்குள் அதிகாரி, ஏட்டு கைகலப்பு
/
திருச்செந்துார் கோவிலுக்குள் அதிகாரி, ஏட்டு கைகலப்பு
திருச்செந்துார் கோவிலுக்குள் அதிகாரி, ஏட்டு கைகலப்பு
திருச்செந்துார் கோவிலுக்குள் அதிகாரி, ஏட்டு கைகலப்பு
ADDED : செப் 08, 2025 03:33 AM
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவிலுக்குள் போலீஸ்காரரும், அறநிலையத் துறை அதிகாரியும், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
திருச்செந்துார் சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு, 60 வயதுக்கு மேற்பட்டோர் செல்லும் தனி தரிசன பாதையில், குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு பிரபாகரன் என்பவர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அடையாள அட்டை இல்லாமல் வரிசைக்கு இடையில் புகுந்து, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக் என்பவர் சென்றார். இதை கண்டதும், பக்தர்கள் கூச்சலிட்டனர்.
விவேக்கிடம், 'நீங்கள் யார்' என பிரபாகரன் விசாரித்தார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில், ஏட்டு பிரபாகரனை, விவேக் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இருவரின் புகாரில், கோவில் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில், 'திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவில் கண்காணிப்பாளர் விவேக், போலீசாரால் தாக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. போலீசாரின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது. அறநிலைய அதிகாரியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும். இப்பிரச்னையில், உயர் நீதிமன்றம் தானாக தலையிட்டு, பக்தர்களின் நலன் காக்கும் வகையில், விதிமுறைகளை வகுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.