/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குறையும் தேங்காய் விலை; குடும்பத் தலைவிகள் நிம்மதி
/
குறையும் தேங்காய் விலை; குடும்பத் தலைவிகள் நிம்மதி
குறையும் தேங்காய் விலை; குடும்பத் தலைவிகள் நிம்மதி
குறையும் தேங்காய் விலை; குடும்பத் தலைவிகள் நிம்மதி
ADDED : டிச 11, 2025 06:29 AM
ஸ்ரீவில்லிபுத்துார்,ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் விலை குறைந்து வருவதால் குடும்பத்தலைவிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் செண்பகத் தோப்பு, மம்சாபுரம் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளிலும், வத்திராயிருப்பு தாலுகாவில் கூமாபட்டி, கான்சாபுரம், நெடுங்குளம், அத்தி கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் அதிகளவில் தென்னை மரங்கள் இருப்பதால் தேங்காய் விளைச்சல் அதிகளவு கிடைத்து வருகிறது.
இப்பகுதியில் விளையும் தேங்காய்கள் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தேங்காயின் விலை ரு.72 க்கும் அதிகமாக இருந்தது. சிறிய ரக தேங்காய் ரூ. 30 வரை விற்பனையானது. வெளி மாநிலங்களுக்கு அதிகளவு தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டதே விலை உயர்வுக்கு காரணமாக இருந்ததாக விவசாயிகள் கூறினர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தேங்காயின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ தேங்காய் விலை ரூ. 60க்கும், ஒரு தேங்காயின் விலை ரூ. 20க்கும் தெருக்களில் வந்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகா குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

