/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிருதுமால் நதியில் தற்காலிக பாதை சேதம் * கிராமங்கள் துண்டிப்பால் மக்கள் தவிப்பு

ADDED : டிச 11, 2025 06:28 AM
நரிக்குடி, நரிக்குடி உச்சநேந்தல் அருகே கிருதுமால் நதியில் அதிக நீர் வரத்தால் தற்காலிக ரோடு முற்றிலும் சேதமடைந்தது. அப்பகுதி கிராமங்கள் துண்டிக்கப்பட்டதால் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
நரிக்குடி உச்சநேந்தல் அருகே கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ. 6 .91 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வாகனங்கள் செல்ல தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில் குடிநீர் தேவைக்காக சமீபத்தில் வைகை அணையில் இருந்து 8 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிகிறது. இதனால் உச்சநேந்தல் அருகே கிருதுமால் நதியைக் கடக்க ஏற்படுத்தப்பட்ட தற்காலிக பாதை முற்றிலும் சேதம் அடைந்தது.
இதனால் அப்பகுதியில் உள்ள உச்சநேந்தல், வாகைகுளம், பட்டனேந்தல், புளியங்குளம் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பல கி. மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆற்றை கடக்க முடியாத சூழ்நிலையால் எத்தனை நாள் ஆகுமோ என அச்சத்தில் உள்ளனர். அடித்துச் செல்லப்பட்ட பாதையை மீண்டும் தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
படம் உண்டு.