ADDED : டிச 11, 2025 06:15 AM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு டிச. 12 முதல் நடக்கிறது. 2025 ஜூலை 15ல் முதல் நிலை எழுத்துத் தேர்வு செப். 28 நடந்தது.
அதை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இலவச பயிற்சி வகுப்பு டிச. 12 முதல் அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
இப்பயிற்சி வகுப்பில் இலவச பாடவாரியானத் தேர்வுகள் மற்றும் முழுமாதிரித் தேர்வுகள் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்போர் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகவோ தெரிவிக்கலாம். , என்றார்.

