விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 10ம் வகுப்பில் 490 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது.
இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களிடம் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கலெக்டர் ஜெயசீலன் கேட்டறிந்தார். பின் அவர் பேசியதாவது: ஒரு தெளிவான இலக்கை நிர்ணயிக்கும் போது, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நமக்கு எளிதாக இருக்கும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்.
இதிலிருந்து உங்களுக்கான இலக்கை அடைவதற்கு என்ன தேவை என திட்டத்தை வகுத்துக் கொள்வது மிக அவசியம். பிளஸ் 1, 2ம் வகுப்புகள் படிக்கின்ற போதே, உயர்கல்விக்கான இலக்கை நிர்ணயித்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும், என்றார்.