/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடிந்து விழுந்த அரசு பள்ளி சுற்றுச்சுவர்
/
இடிந்து விழுந்த அரசு பள்ளி சுற்றுச்சுவர்
ADDED : ஏப் 29, 2025 04:59 AM

நரிக்குடி: நரிக்குடி மறையூரில் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் விபத்து அச்சம் உள்ளதால் அப்புறப்படுத்தி புதிதாக கட்ட மக்கள் வலியுறுத்தினர்.
நரிக்குடி மறையூர் நடுநிலைப்பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகம் திறந்த வெளியாக இருந்ததால், சமூக விரோத செயல்கள் நடந்தது. கால்நடைகளை உள்ளே கட்டிப் போட்டனர். அசுத்தமாக இருந்ததால், பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. இதையடுத்து, 10 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அதற்குப்பின் பாதுகாப்பாக இருந்தது.
நாளடைவில் சுற்றுச் சுவர் சேதமடைந்து 6 மாதங்களுக்கு முன் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. தற்போது மீண்டும் சமூக விரோத செயல்கள், கால்நடைகளை அடைப்பது என விரும்பத்தகாத செயல்கள் நடக்கின்றன. பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்து வருகிறது. உடைந்தது போக மீதமுள்ள சுற்றுச்சுவர் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறது. அப்பகுதியில் மாணவர்கள் விளையாடுகின்றனர். எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் பெற்றோர் உள்ளனர். விபத்திற்கு முன் மீதமுள்ள சுற்றுச் சுவரை அப்புறப்படுத்தி பள்ளியின் பாதுகாப்புக்காக புதிதாக சுற்றுச் சுவர் கட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.