/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அங்கன்வாடி மையத்தில் இடிந்து விழுந்த கைப்பிடிச் சுவர்
/
அங்கன்வாடி மையத்தில் இடிந்து விழுந்த கைப்பிடிச் சுவர்
அங்கன்வாடி மையத்தில் இடிந்து விழுந்த கைப்பிடிச் சுவர்
அங்கன்வாடி மையத்தில் இடிந்து விழுந்த கைப்பிடிச் சுவர்
ADDED : ஜூலை 22, 2025 03:21 AM

சிவகாசி: சிவகாசி முண்டகன் தெருவில் கட்டப்பட்ட ஆறே ஆண்டுகளில் அங்கன்வாடி மையத்தில் படியின் கைபிடிச் சுவர் சேதம் அடைந்து இடிந்து விழுந்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இரவில் விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சிவகாசி முண்டகன் தெரு எஸ்.எச்.என்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எம்.எல்.ஏ., நிதி, பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இங்கு 30 குழந்தைகள் வரை படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு அங்கன்வாடி மையத்தில் வாசல் படியில் உள்ள கைப்பிடிச்சுவர் முழுமையாக இடிந்து விழுந்தது. கட்டப்பட்ட ஆறே ஆண்டுகளில் இடிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அங்கன்வாடி மையம் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் இயங்கவில்லை. வேலை நாளில் சுவர் இடிந்து விழுந்திருருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தரமான கைப்பிடிச் சுவர் அமைக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.